BooksClub
Ponniyien Selvan Kaarventhan

Author

Ponniyien Selvan Kaarventhan

"Ponniyin Selvan Karventhan is a Robotics Research Engineer whose vision bridges the world of science and the soul of spirituality. His works emerge from the harmony of scientific inquiry, deep meditation, and the eternal quest for truth. Through his explorations in epigraphy, archaeology, stage oratory, and discourses on science and spirituality, Karventhan breathes new life into Tamil’s timeless heritage. His writings transcend mere words - they are reflections of consciousness, compassion, and clarity. Guided by the blessings of the ancient Tamil lineage, he believes that humanity is an integral part of the cosmic order and that love and virtue illuminate the path toward divine understanding. “May knowledge bring clarity, may love bring unity, and may truth light the way.” - Ponniyin Selvan Karventhan "

4

Published Books

Books by Ponniyien Selvan Kaarventhan

 Nerigalin Nizhalile / நெறிகளின் நிழலிலே

திருச்சிற்றம்பலம். நெறிகளின் நிழலிலே என்ற புத்தகமானது சிறுகதை தொகுப்பு புத்தகமாக விளங்குகின்றது. இந்த நூலின் முதன்மைக் கருத்து என்பது ஒழுக்கமே ஆகும். ஒழுக்க வழியில் நடப்பதால் நிகழும் நல்ல விடயங்களையும், மனித வாழ்வில் பின்பற்ற வேண்டிய தெய்வீக தத்துவார்த்த வழிமுறைகளையும், கோட்பாடுகளையும் - இந்த நூல் விளக்குகின்றது. முதல் தொகுதி அறம், இரண்டாம் தொகுதி அன்பு, மூன்றாம் தொகுதி நெறி - என்ற வகையில் பிரித்து ஒவ்வொரு தொகுதிக்கும் 10 கதை என அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த 10 கதைகளின் வாயிலாக மனிதன் அந்த தொகுதியின் உண்மையான கருத்துக்களை ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஆத்மார்த்தமாக தெரிந்து கொள்ள இயலும். அப்படி தெரிந்து கொள்ளுகின்ற கதையின் வழியே அவர்களுடைய வாழ்வு உயர்வு பெற்று ஒழுக்கம் நிறைந்ததாக மாறி நெறிகளின் வழியே முக்தியை நோக்கி அடைய இந்த நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கற்கின்ற ஒவ்வொரு நல்ல கருத்துக்களையும் மனதார உணர்ந்து நல்லவைகளை எடுத்துக் கொண்டு அந்த நல்லவைகளின் மூலமாக வாழ்க்கையை நாம் நெறிப்படுத்தி, நிலைப்படுத்தி - நாளைய உலகிற்கான தலைவர்களாக உருவாக, இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும். இந்த நூலில் பயன்படுத்தி இருக்கக்கூடிய கதை மாந்தர்களின் பெயர்கள் யாவும் தனித்துவமான பெயர்களாகவும், இக்கதையில் வருகின்ற ஒவ்வொரு கதையின் கருவும் ஆழமான கருத்துக்களையும் அறவழியில் அன்போடு உயிர்மெய் நேயம் கலந்த நெறியோடு வாழ்வதால், நிகழும் நல்ல நிகழ்வுகளையும் விரிவுபடுத்தி இருப்பதால் - நிச்சயமாக இந்த நூல் அனைவரின் அன்பையும் பெறுமென மனப்பூர்வமான தன்னம்பிக்கையோடு அனைவரிடத்திலும் இந்த தத்துவார்த்த சிறுகதை தொகுப்பினை சமர்ப்பிக்கிறேன். இதை படித்து, உணர்ந்து - வாழ்வில் வெற்றி வாழ்த்துக்கள்.

₹150.00Ebook ₹100.00
" Ennavalukkaagaa en kavithaigal (Part-1) / என்னவளுக்காக என் கவிதைகள் (பகுதி-1) "

திருச்சிற்றம்பலம் . என்னவளுக்காக என் கவிதைகள் என்னும் நூலானது, என் வாழ்வில் விடிவெள்ளியாக தோன்றிய இறைவனின் அருட்பெரும் கொடையாகவும் வரமாகவும் நான் கடந்த பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பரிசாகவும், எனக்கு என் வாழ்வில் கிடைத்த என்னவள் - என் அகமுடையாள் என் மனைவிக்காக எழுதப்பட்ட காதல் கவிதை நூல். இது ஆதி காலத் தமிழர்களுடைய அகநானூரை அடித்தளமாக கொண்டு எழுதப்பட்ட நூல். இந்த நூலின் வழியே நாளைய உலகிற்கு உண்மை காதலையும் காதலால் உருவாகின்ற அற்புத வாழ்வையும் இல்லறத்தையும் - அந்த இல்லறத்தின் வழியே கிடைக்கப் பெறுகின்ற முக்தியின் அறநிலையையும் வருங்கால தலைமுறைக்கு விட்டுச் செல்வதற்காகவும், எடுத்துக்காட்டாகவும், அவர்கள் பின்பற்றுவதற்காகவும் - இந்த நூலை நான் படைத்திருக்கிறேன். காதலானது உண்மையாகவும், உன்னதமாகவும் - ஆயிரம் கவலைகள் வந்தாலும் என்றும் விட்டுக் கொடுக்காத அசைக்க முடியாத அன்போடு இருக்க வேண்டும் என்பதை இந்த நூலின் வழியே நான் உலகிற்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இது என் மனைவிக்காக எழுதப்பட்ட காதல் கவிதை நூலாக இருந்தாலும், இந்த நூலின் வழியே காதலின் தனித்துவத்தையும் காதலுக்காக நாம் கொடுக்க வேண்டிய மரியாதையையும் நம்மை நம்பி வரும் காதலி, மனைவியான பிறகும் குறைவில்லாமல் அளவிட முடியாத அன்போடு அளப்பரிய காதலோடு உயிருள்ளவரைஅவளை நேசிக்க வேண்டும் - என்பதற்காகவும் அந்த காதலின் தன்மையும், குணமும், ஈர்ப்பும், ரசனையும் குறைவில்லாமல் மனதார காதலிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நூல் படைக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலின் வழியே காதலின் பெருமையையும் தனித்துவத்தையும் மரியாதையையும் உணர்ந்து காதலுக்கு அனைவரும் வணக்கம் செலுத்த வேண்டிக் கொள்கிறேன் வாழ்த்துகள்.

₹100.00Ebook ₹100.00
Athiyana karuṇaiyum anthamagum mutthiyum (Part-1) /

திருச்சிற்றம்பலம் . ஆதியான கருணையும் அந்தமாக முக்தியும் என்ற இந்த நூல் "இறை வழிபாட்டு" பாடல் நூலாக திகழ்கிறது . பிரபஞ்சத்தைப் படைத்து அதில் உள்ள நன்மை, தீமை என அனைத்தையும் உருவாக்கி வழிநடத்தக்கூடிய - உண்மையான இறையருள் / பரம்பொருள் அவரின் கருணையினால் உருவான இந்த மனித வாழ்வு என்பது, முக்தி என்னும் இறைநிலையை அடைவதே அதன் வாழ்வியல் அத்தியாயமாகவும், தத்துவ கோட்பாடாகவும் இருக்கிறது. ஆனால் அந்த அருட்கருணையினால் அவதரித்த உயிர்கள் யாவும் - அத்தகைய முக்தி நிலையின் உண்மை தத்துவம் புரியாமல், அவர்கள் வாழும் இந்த வாழ்க்கையில் பல தவறுகளை தெரிந்தும் தெரியாமலும் செய்வதால் ஏற்படுகின்ற கர்ம வினையின் காரணமாக மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து ஆத்மாவை துன்பப்பட வைக்கின்றனர். அத்தகைய துன்பத்திலிருந்து ஒரு உயிரானது விடுபட்டு முக்தியை நோக்கி செல்வதற்கான சான்றாகவும் - வழிகாட்டும் நூலாகவும் இதனை நான் படைத்திருக்கிறேன். கருமுதல் திருவரை என்ற நூலை முதன்மையான நூலாகவும் அடிப்படையாகவும், அதன் சாராம்சத்தை நூலின் தனித்துவ கருத்தாகவும் ஏற்றுக்கொண்டு. புவியில் உருவாகின்ற கருவானது - இந்த மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மரணித்துப் போகும் வரையில் இருக்கின்ற அந்த கால அவகாசத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்றும், பிரபஞ்சத்தை படைத்த பரம்பொருளை நாடி - வழிபட்டு ஒழுக்க நெறியில் அறத்தின் வழியில் உயிர்மெய் நேயம் கொண்டவராக இருக்க வேண்டும், என்பதற்கான ஒரு களஞ்சியமாக இந்த நூலை நான் எழுத முற்பட்டு இருக்கிறேன். கருவில் உருவான உயிர் இறை நிலையை அடைவதற்காக அந்த கருவில் உருவான உயிரை தாங்குகின்ற தாயும் அதன் தந்தையும் இந்த பாடல்களை பாடி வந்து அந்த கருவினை இறை தன்மையோடு உருவாக்கி நாளைய தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக விட்டுச் செல்லும் - தலைமை பண்பு நிறைந்த தத்துவ தெய்வ சித்தாந்தம் அடங்கிய கருத்தோடும் - உயிமெய் நேயமும் கலந்த உன்னத ஒழுக்கமான உயிராக படைப்பதற்கு விளைய வேண்டும் என்பதற்காகவும், இந்த நூல் அடிப்படையான கருத்துகளால் தத்துவக் கொள்கையுடன் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த நூலை படிக்கின்ற ஒவ்வொருவரும் இந்த நூலின் வழியே அவர்களுடைய வாழ்க்கையின் உண்மை தத்துவத்தை உணர்ந்து மெய்யியல் கோட்பாட்டை உளமாற சிந்தித்து அனுபவித்து மாயைகளை துறந்து இறைவனை அடைந்து முக்தி பெற வாழ்த்துகிறேன்.

₹100.00Ebook ₹100.00
She Who Illuminates My World

Thiruchitrambalam. “She Who Illuminates My World” is not merely a collection of verses, but the radiant dawn of my life - a divine gift, a sacred boon, the reward of countless virtues from lives before. This work was born for my beloved, my innermost soul, my wife, and is written upon the eternal foundation of the ancient Tamil treasure, Akanāṉūṟu. Through these poems, I seek to carry forward to tomorrow’s world the truth of love, the wonder of a life shaped by it, the sanctity of household harmony, and the path of liberation revealed through it. Love must remain true, unshaken, and sublime a flame that no storm of sorrow can ever quench. This is the message I long to leave behind. Though this book is for my wife, its breath belongs to all: to remind the world of love’s uniqueness, its dignity, its immeasurable worth. The lover who becomes the wife, who places her trust in us, must be cherished without measure, loved without end - with the same depth, delight, and devotion for as long as breath endures. May these poems teach hearts to revere love, to honor its grandeur and sanctity, and to bow before its eternal truth.

₹100.00Ebook ₹100.00

Quick Stats

4

Books